மத்திய பிரதேசம் மாநிலம் பண்ணா மாவட்டத்தில் அதிர்ஷ்டம் இரண்டு நண்பர்களின் கதவை ஒரே நேரத்தில் தட்டியது. ஒரே இரவில் அவர்களின் வாழ்க்கையையும் மாற்றி உள்ளது. 24 வயதான சதீஷ் காதிக் மற்றும் 23 வயதான சஜித் முகமது இருவரும் குடும்ப பொறுப்புகளால் தினமும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இருவருடைய குடும்பமும் நிதி ரீதியாக சிரமப்பட்ட நிலையில் இருவரும் தங்கள் சகோதரிகளின் திருமணங்களை எப்படி செய்து முடிப்பது என்று தெரியாமல் கவலையிலிருந்து உள்ளனர். சதீஷ் ஒரு சாதாரண இறைச்சிக் கடையை நடத்தி வந்த நிலையில் சஜித் பழங்களை விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
ஒரு சிறிய அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் ஒரு சிறிய சுரங்கத்தை குத்தகைக்கு எடுக்க இருவரும் முடிவு செய்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருந்த நிலையில் அதிகபட்சமாக தங்கள் குடும்பங்களின் நிதி நெருக்கடியை குறைக்க ஒரு சிறிய வைரத்தை கண்டுபிடிப்பது அவர்களின் கனவாக இருந்தது. குத்தகைக்கு எடுத்து 20 நாட்களுக்குப் பிறகு இருவரும் தோண்டிக் கொண்டிருந்தபோது மண்ணில் ஏதோ திடீரென மின்னியது. முதலில் சூரிய ஒளி அதைப் பிடிக்கும் வரை அதை ஒரு சாதாரண கல் என்று அவர்கள் நிராகரித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் கண்முன்னே மின்னியது ஒரு அற்புதமான 15.34 கேரட் வைரம். அவர்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் தேடினாலும் அப்படி ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கவே முடியாது. தங்கள் அதிர்ஷ்டத்தை நம்ப முடியாமல் இருவரும் உற்சாகத்தில் அமைதி காத்தனர். அந்த வைரத்தை அங்கிருந்த வைர அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற நிலையில் அந்த வைரக்கல்லின் மதிப்பு 50 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைக் கேட்டதும் நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியில் உறைந்து போய் நின்றனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
#Watch | Two friends — 24-year-old Satish Khatik and 23-year-old Sajid Mohammad — recently leased a mine in the diamond-rich soil of Madhya Pradesh’s Panna, hoping to discover a gem that would help them overcome their financial crisis and arrange funds for their sisters’… pic.twitter.com/4ORl18s7H5
— NDTV (@ndtv) December 10, 2025
