நாடே அதிர்ச்சி… “சார், உங்கள கெஞ்சி கேட்கிறேன் ஒரு வாரம் டைம் குடுங்க”… வகுப்பறையிலையே தீக்குளித்த மாணவன்… பரபரப்பு வீடியோ…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தின் முசாபர்பூர் நகரின் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு BA படிக்கும் மாணவன் 7000 ரூபாய் கட்டாததால் ஹால் டிக்கெட் கொடுக்க கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் மனமுடைந்த மாணவன் வகுப்பறையிலேயே தீக்குளித்துள்ளார். பயங்கர தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பணத்திற்காக ஏழை மாணவனின் வாழ்க்கையை இக்கட்டான சூழலுக்கு தள்ளி உள்ள கல்லூரிக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. ஒரு வாரத்திற்குள் பணம் தந்து விடுகிறேன் என்று மாணவர் அவ்வளவு கெஞ்சியும் முதல்வர் அவரை தனது அலுவலகத்தில் வைத்து திட்டி அடித்ததாகவும் பிறகு கல்லூரி வாயிலுக்கு அழைத்து வந்து அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த மாணவன் இத்தகைய முடிவை எடுத்ததாக கூறப்படும் நிலையில் தற்போது கல்லூரி நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.