யாரும் தப்பிக்க முடியாது…! பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டால்…? பொதுகூட்டத்தில் கர்ஜித்த அமைச்சர் அமித்ஷா…!!

By Devi Ramu on கார்த்திகை 10, 2025

Spread the love

பீகார் சட்டமன்றத்தின் 243 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்டத்தில் 121 தொகுதிகளும், இரண்டாவது கட்டத்தில் 122 தொகுதிகளும் உள்ளன. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.

முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடைபெற்றது. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் இல்லை. இதில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாவது கட்ட தேர்தல் நவம்பர் 11 அன்று நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் கட்சிகள் நேற்று தீவிரமாக ஈடுபட்டன.

   

இரண்டாவது கட்ட தேர்தலை முன்னிட்டு சசராம் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அவர், “சக்தி பீடம் போன்ற புனித இடத்தில் கூறுகிறேன். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டால் துப்பாக்கி குண்டால் பதில் கொடுப்போம். இந்த குண்டுகள் எங்கு தயாரிக்கப்படும்? பிரதமர் மோடி பாதுகாப்பு தளம் அமைக்கிறார். பீகாரில் ஆயுதத் தொழிற்சாலை உருவாக்கப்படும். பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாது என கூறியுள்ளார்.