“உலக மக்கள் மீண்டும் வறுமையில் வீழ்வார்கள்!”… 10 ஆண்டு கால உழைப்பு வீணாகிடும்.. பிரதமர் மோடி கொடுத்த அதிரடி வார்னிங்..!!

By Muthu Mani on வைகாசி 17, 2026

Spread the love

நெதர்லாந்தின் ‘தி ஹேக்’ (The Hague) நகரில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போதைய தசாப்தம் உலகிற்குப் பேரழிவுகளின் தசாப்தமாக மாறி வருவதாகக் குறிப்பிட்டார். முதலில் கொரோனா பேரிடர், அதனைத் தொடர்ந்து போர்கள் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான எரிசக்தி நெருக்கடி என மனிதகுலம் ஒரே நேரத்தில் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழ்நிலை விரைவில் மாறாவிட்டால், கடந்த தசாப்தங்களில் உலகம் பெற்ற சாதனைகள் அனைத்தும் வீணாகி, உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் மீண்டும் வறுமையில் வீழக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

இத்தகைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா அடைந்துள்ள தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் பிரதமர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். கடந்த சில ஆண்டுகளில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை விட 11 மடங்கு அதிகமான ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை இந்தியா அமைத்துள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு மொபைல் போன்களை இறக்குமதி செய்த நாடாக இருந்த இந்தியா, இன்று உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தி நாடாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளது.

   

இந்தியாவின் ‘டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு’ இன்று உலகளவில் பேசப்பட்டு வருவதோடு, நாடு ஒரு புதிய கண்டுபிடிப்புகளின் மையமாக மாறியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 500-க்கும் குறைவான ஸ்டார்ட்-அப்களே இருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த 2014-ஆம் ஆண்டில் வெறும் 4 ‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை சுமார் 1.25 லட்சமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

   

மேலும், செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தித் துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது இந்தியாவில் 12 செமிகண்டக்டர் ஆலைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, மிக விரைவில் செமிகண்டக்டர் சிப்கள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.