பொதுமக்களுக்கு அடுத்த ஷாக்… டிவி, லேப்டாப், மொபைல் விலை 120% உயர்வு…. மார்ச் மாதம் முதல் எல்லாமே மாறப்போகுது…!

By Nanthini on தை 18, 2026

Spread the love

மைக்ரோசிப்களின் கடும் தட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, அடுத்த இரண்டு மாதங்களில் தொலைக்காட்சி பெட்டிகள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அதிரடியாக உயரும் எனத் தொழில்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி அறிக்கையின்படி, மைக்ரோசிப்களின் விலை வரும் மார்ச் மாதத்திற்குள் சுமார் 120 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த இக்கட்டான சூழலால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், மின்னணு சாதன நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் லாபத்தைப் பாதுகாக்க தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை குறைக்கத் தொடங்கிவிட்டன, இது சாமானிய மக்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை இந்த விலை உயர்வு ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், இதன் தாக்கம் காரணமாக வரும் மாதங்களில் செல்போன் விற்பனை 10 முதல் 12 சதவீதம் வரை குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து முன்னணி பிராண்டுகளும் தங்களின் அதிகாரப்பூர்வ விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளன. எனவே, நுகர்வோர் தங்களுக்குத் தேவையான மின்னணு சாதனங்களை இப்போதே வாங்குவது லாபகரமாக இருக்கும் என்றும், காலம் தாழ்த்தினால் கூடுதல் தொகையைச் செலவிட வேண்டியிருக்கும் என்றும் சந்தை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.