“14 வயதில் உலக சாதனை” இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது..!!

By Soundarya on மார்கழி 26, 2025

Spread the love
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு மத்திய அரசு உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது. இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ (PM Rashtriya Bal Puraskar) விருதை, 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பீகார் அணிக்காக விளையாடிய வைபவ், சத்தீஸ்கருக்கு எதிரான லீக் போட்டியில் அதிரடியாக விளையாடி வெறும் 36 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் ‘லிஸ்ட் ஏ’ (List A) கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த இளம் வீரர் எனும் வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.