ஒப்பந்த செவிலியர்கள் 1,000 பேர் வரும் பொங்கல் பண்டிகைக்குள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பணிநிரந்தரம் கோரி கடந்த வாரம் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை கைது செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் 1,000 பேருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
