Actor Jiiva

டிடிடி படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு பட்டு வேட்டி சட்டை மற்றும் பட்டுப் புடவை பரிசு… தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆன காட்சிகள்!

By Elango on மாசி 6, 2026

Spread the love

நடிகர் ஜீவா நடித்த படம் தலைவர் தம்பி தலைமையில் கடந்த 15ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று முன்தினம் வரை 32 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது. நாளை இந்த படத்தின் 25வது என்பதால் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகர் ரசிகைகளுக்கு பட்டுப்புடவை மற்றும் பட்டு வேட்டி சட்டை பரிசாக வழங்கப்படுகிறது.

நாளை ரோகிணி தியேட்டரில் 4 காட்சிகளில் படம் பார்க்க வரும் ஆண்கள் பெண்கள் ரசிகர்களுக்கு இந்த பரிசுகள் வழங்கப்படுகிறது. பட்டுப்புடவை ரூ. 1500 மதிப்பு பட்டு சட்டை வேட்டி சட்டை ரூ. 1500 மதிப்பு என ஒரு காட்சிக்கு 250 பேர் இருக்கை வீதம் 4 காட்சிகளுக்கும் 1000 பேருக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் இந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த தகவல் வெளியான நிலையில் 2 காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டதாக தெரிகிறது.