கோவையை சேர்ந்த நண்பர்கள் மூலம் உருவானது நக்கலைட்ஸ் யூடியூப். இது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் இருந்த பிரசன்னா பாலச்சந்தர் ஜென்சன் திவாகர் அருண் போன்றவர்கள் பல படங்களில் நடித்திருக்கின்றனர். லப்பர் பந்து குடும்பஸ்தன் ஆண் பாவம் பொல்லாதது தலைவர் தம்பி தலைமையில் படங்களில் நடித்த ஜென்சன் திவாகர் ஆரம்பத்தில் நக்கலைட்ஸ் யூடியூப்பில் ஏராளமாக நடித்தவர்.
குடும்பஸ்தன் படத்தை இயக்கிய ராஜேஸ்வர் காளிச்சாமி தான் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் அருண் நக்கலைட்ஸ் வீடியோக்களில் நிறைய நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். சபாநாயகன் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இப்போது அருண் தங்கப்புள்ள என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜேஷ் சுந்தரமுத்து என்பவர் டைரக்ட் செய்கிறார். கிராமத்து கதைக்களத்தில் இந்த படம் ஒரு பீல்குட் படமாக உருவாகிறது.
