பிரபல இசையமைப்பாளரான கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜிக்கு இசை மீது ஆர்வம் அதிகம். இவர் வெளிநாடுகளுக்கு சென்று இசை பயின்றுள்ளார். பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார். ஒரு சில படங்களுக்கு இசையமைத்து பாடகராகவும் வலம் வந்துள்ளார்.
வல்லவன் திரைப்படத்தில் இடம்பெற்ற லூசு பெண்ணே பாடல், சென்னை 600028 படத்தில் இடம்பெற்ற ஜல்சா, கோவா படத்திலிருந்து பெற்ற விளையாடும் மங்காத்தா ஆகிய பல்வேறு பாடல்களை ரீமிக்ஸ் செய்து பிரேம்ஜி சூப்பர் ஹிட் ஆக்கினார். கடந்த 2005 -ஆம் ஆண்டு ஞாபகம் வருதே திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்திற்கு பிரேம்ஜி தான் இசை அமைத்தார். இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவான சத்திய சோதனை திரைப்படத்தில் பிரேம்ஜி ஹீரோவாக நடித்தார்.
45 வயதான பிரேம்ஜிக்கு ஈரோட்டை சேர்ந்த இந்து என்பவர் உடன் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் முறையாக பிரேம்ஜி தனது மாமியார் வீட்டிற்கு சென்ற வீடியோவும் வைரலானது.
இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த பிரேம்ஜியிடம் திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரேம்ஜி கல்யாண வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்கு. கல்யாணம் ஆகி 2 1/3 மாசம் ஆகுது. எல்லா ஊரையும் சுத்தி பார்த்துட்டு ஜாலியா இருக்கோ ம் என பேசி உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.
View this post on Instagram