கூட்டத்தில் சிக்கிய ப்ரேமலு பட ஹீரோயின்.. அத்துமீறிய ரசிகர்கள்.. கடுப்பான நடிகை.. வீடியோ வைரல்.

By Mahalakshmi on ஜூன் 3, 2024

Spread the love

2024 ஆம் ஆண்டின் அரையாண்டு முடிவடைந்துவிட்டது. தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையவில்லை. அரண்மனை படம் மட்டுமே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. தற்போது சூரியின் கருடன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது. இன்னும் ஓரிரு வாரங்களில் படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகும்.

   

வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் படங்கள் பலரும் தமிழில் வெளியாகி சொதப்பிய நிலையில் மலையாள திரையுலகில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் குறைந்த பட்ஜெட் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் பிரேமலு என்ற திரைப்படம்.

   

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. இப்படத்தில் நஸ்லேன் சச்சின் என்கின்ற கதாபாத்திரத்திலும், மமீதா பைஜூ ரீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு சாதாரண இளைஞனின் காதல் கதையை இயல்பாக சொல்லி ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார் இயக்குனர் கிரிஷ். இது ரசிகர்களுக்கு பிடித்துப் போக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடித்திருந்தது.

 

படத்தில் அழகான அம்சங்களில் டாப் லிஸ்டில் இருந்தவர் தான் மமீதா.  இவரை பிரேமலு படத்தில் பார்த்ததிலிருந்து தமிழக இளைஞர்கள் பலரும் இவர்தான் க்ரஷ் என்று கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார் மமீதா. தமிழில் ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அப்படத்தின் பெயர் ரெபல். ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு வாய்ப்பளித்திருந்தது. தற்போது இரண்டாவது ஒரு புதிய திரைப்படத்தில் தமிழில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இயக்குனர் மற்றும் நடிகரான பிரதிப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகை மமிதா சென்னையில் உள்ள மாலில் கடை திறப்பு விழா ஒன்றுக்கு வந்திருந்தார். அப்போது ரசிகர்கள் அவரைப் பார்த்து சூழ்ந்து கொண்டனர். பலரும் அவரிடம் செல்ஃபி எடுக்க குவிந்ததால் அவரால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த மமீதாவை பாதுகாப்பாக காவலர்கள் வெளியில் அனுப்பி வைத்தனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.