கேஜிஎஃப் நடிகை மீது தாக்குதல்.. கார் மோதிய விபத்தால் ஏற்பட்ட கலவரம்.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on ஜூன் 3, 2024

Spread the love

கேஜிஎப் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரவீனா டாண்டனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ஆளவந்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தவர் ரவீனா டாண்டன்.

   

மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் இந்தி படங்களில் நடித்திருக்கின்றார். ஹிந்தி மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் உள்ளிட மொழிகளிலும் இவர் நடித்திருக்கின்றார். அதிலும் கடைசியாக இவர் கேஜிஎஃப் 2 திரைப்படத்தில் ராமிகா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழும் அடைந்தார்.

   

 

இவர் ஜூன் 1ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கார்னர் சாலையில் இரவு வேகமாக கார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற மூன்று பெண்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பெண்களுக்கு லேசாக காயம் பட்டது. கார் டிரைவர் காரிலிருந்து இறங்கி வந்து சாலையை கடக்க முயன்ற பெண்களுடன் வாக்குவாதம் செய்தார்.

இதைத்தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய நடிகை ரவீனா டாண்டன் டிரைவருடன் சேர்ந்து அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகின்றது. அப்போது அங்கிருந்த பலரும் ஆக்ரோஷம் அடைந்து ரவீனா டாண்டனை தாக்கியதாக கூறப்படுகின்றது . இதனை சிலர் வீடியோவாகவும் எடுக்க முயற்சி செய்துள்ளனர். அந்த வீடியோவில் ப்ளீஸ் தயவு செய்து என்னை அடிக்காதீர்கள் என்று அங்கிருந்தவர்களிடம் அவர் கெஞ்சுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.