2026 தேர்தல்… கூட்டணி இல்லை… சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் திடீர் அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தேமுதிக இதுவரை தங்கள் கூட்டணி கட்சியை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது. விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என பிரேமலதா அதிரடியாக கூறியுள்ளார். கீழ்பெண்ணாத்தூர் பரப்புரையில் பேசிய அவர், ஒரு பெண்ணாக மக்கள் படும் இன்னல்களை அறிய முடிவதாகவும் கூறியுள்ளார். இதன் மூலமாக தேமுதிக திமுகவுடன் செல்லவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாக அரசியல் நோக்கங்கள் கூறுகின்றனர். அதே நேரம் அதிமுக மற்றும் TVK என இவை இரண்டில் எந்த பக்கம் செல்வார்கள் என்பதையும் கணிக்க முடியவில்லை.