2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்று செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளார். இருந்தாலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் முக்கிய புள்ளிகள் பலரும் மாற்று கட்சிகள் இணைந்து வருகின்றன.
இந்நிலையில் இரண்டாவது தவெக மாநாட்டுக்கு பின், விஜய்யை விமர்சித்த பிரேமலதாவின் நிலைப்பாட்டில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், 20 சீட்டுக்கு மேல் கேட்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், “கூட்டணி ஆட்சி” என்ற மையப் புள்ளியை வைத்து, தவெகவுடன் கூட்டணி வைக்க பிரேமலதா முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.
