“கூட்டணிக்கு வரணும்னா இது கிடைச்சே ஆகணும்” கேப்டன் பாணியை கையிலெடுத்த பிரேமலதா… திமுக, அதிமுகவுக்கு செக்..!!

By Soundarya on தை 26, 2026

Spread the love

நாங்கள் கூட்டணிக்கு வர வேண்டுமென்றால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு (Coalition Government) அளிக்கப்பட வேண்டும்” என்பதைத் தேமுதிக ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் பேசப்பட்டபடி, தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட வேண்டும் என்பதில் பிரேமலதா உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தங்களுக்குப் பலமான மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் யாரும் யாருக்கும் அடிமையில்லை, தேர்தல் நேரத்தில் தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். திமுக அல்லது அதிமுக என எந்தப் பக்கம் சென்றாலும், அதிகாரப் பகிர்வு மற்றும் உரிய அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே கூட்டணி சாத்தியம் என்ற தொனியில் அவரது பேச்சு அமைந்துள்ளது. 2026 தேர்தலில் தேமுதிகவின் இந்த ‘டிமாண்ட்’ பெரிய கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.