குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… மேஜிக் நம்பர் 118-ஐ எட்டுமா திமுக..? கடும் நெருக்கடியில் ஸ்டாலின்…!!

By Soundarya on தை 26, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் தற்போதே அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. காங்கிரஸ் (25), விசிக (6), மதிமுக (6), கம்யூனிஸ்ட் கட்சிகள் (12) மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கினால், திமுக சுமார் 150 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடக்கூடிய சூழல் உருவாகும். 234 தொகுதிகள் கொண்ட பேரவையில் தனிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு அந்த இலக்கை எட்டுவது திமுகவிற்கு ஒரு இமாலய சவாலாகவே இருக்கும்.

வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை இணைக்க முயன்றால் திமுக போட்டியிடும் இடங்கள் மேலும் குறையும் அபாயம் உள்ளது. 150-க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதத்தைப் பெறுவது என்பது தற்போதைய அரசியல் சூழலில் கடினமான காரியமாகும். இதற்கிடையில், கூட்டணி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கைக் கோரத் தொடங்கியுள்ளதால், திமுகவின் ‘தனித்து ஆட்சி’ என்ற கனவு விலகி, ‘கூட்டணி ஆட்சி’ என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.