நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா.. விஜய்யே தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி தந்திருப்பார்… பிரேமலதா விஜயகாந்த் அதிரடி… அரசியல் வட்டாரமே ஷாக்..!!

By Soundarya on ஆனி 1, 2026

Spread the love

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், தேமுதிக என்பது பதவிக்கோ, பணத்திற்கோ அல்லது எந்தவொரு பேரத்திற்கோ ஆசைப்படாத ஒரு கட்சி என்பதை இந்தத் தேர்தல் மூலம் நிரூபித்திருப்பதாகக் கூறினார். தான் மட்டும் நினைத்திருந்தால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்திருக்க முடியும் என்றும், தான் ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விஜய்யே தனது வீடு தேடி வந்து தனக்குத் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் ஒரு உண்மையான தேர்தல் இல்லை என்றும், அது ஒரு மாயை அல்லது சுனாமி போன்றது என்றும் பிரேமலதா விமர்சித்தார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட ஒரு தலைகுனிவு என்றும், இது வாக்களித்த மக்களுக்குச் செய்த துரோகம் என்றும் அவர் சாடினார். அத்துடன், கூட்டணி தர்மத்திலும் கொள்கையிலும் தேமுதிக என்றென்றும் உறுதியாக இருக்கும் என்பதற்குத் தங்களின் இந்த நிலைப்பாடே சாட்சி என்றும் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.