“அமைச்சர் பதவிக்காகத் தான் கூட்டணியா?”…. 2 சீட் ஜெயிச்சு ஒரு அமைச்சர் பதவி… விசிகவை மேடையில் வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த்….!

Spread the love

தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் தான் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதாக வெளியான கருத்துக்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமான பதிலடியளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், விசிக தலைவர் திருமாவளவன் மீது தனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு என்றும், கேப்டன் விஜயகாந்த் இருந்த காலம் முதலே இரு கட்சிகளுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், திருமாவளவனின் ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியைத் திறந்து வைத்ததே விஜயகாந்த் தான் என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியின் போது, இதே பிரேமாலயம் அலுவலகத்திற்கு நேரில் வந்து விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராகவும், கூட்டணித் தலைவராகவும் ஏற்றுக்கொண்டவர் திருமாவளவன் தான் என்று சுட்டிக்காட்டிய பிரேமலதா, அன்றைக்கு விஜயகாந்தை தலைவராக ஏற்றுக்கொண்டவர், இன்றைக்கு தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்ததை எப்படி விமர்சிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். நாம் பேசும் வார்த்தைகள் வரலாற்றில் பதிவாகிவிடும் என்பதால், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிலையை மாற்றிப் பேசக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு இடங்களில் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததனால் தான் விசிக இந்த கூட்டணியைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பதுதான் உண்மை என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல ‘எங்களுக்குப் பதவி வேண்டாம், வெளியில் இருந்தே ஆதரவு தருகிறோம்’ என்று விலகி நிற்காமல், அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட பிறகு, மற்ற அமைப்புகள் மீது பழியைப் போடுவது தவறான அணுகுமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்கள் கட்சிக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்ற சுய விருப்பத்திற்காக ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதற்கு தேமுதிகவை ஒரு காரணமாக இழுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்று பிரேமலதா கடுமையாகச் சாடினார். அண்ணன் திருமாவளவன் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைப் பேசியிருக்க மாட்டார் எனத் தான் நம்புவதாகவும், சொந்த நிலைப்பாட்டை மறைக்க மற்றவர்கள் மீது பழி சுமத்துவது முற்றிலும் தவறான செயல் என்றும் கூறி தனது பேச்சை முடித்தார்.

Nanthini

Recent Posts

“வெட்கித் தலைகுனியப் போகிறோம்”…. மக்களை ஏமாற்றும் முதல்வர்?….. லண்டன் பயணத்தின் பின்னே உள்ள ரகசியம்….. அதிர வைக்கும் உண்மை….!

அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ், 'மார்ஷல் மீடியா' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்துக்…

3 minutes ago

“என்ன மன்னிச்சுடுங்கம்மா…. தங்கச்சியையாவது படிக்க வைங்க”…. மாணவியின் தற்கொலை கடிதத்தில் இருந்த நெஞ்சை பிழியும் வார்த்தை…. சோக சம்பவம்….!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத், விஜயநகர் பகுதியில் உள்ள 'கௌர் சித்தார்த்தம்' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது…

13 minutes ago

“என்னை கடிச்ச பாம்பு இதுதான் டாக்டர்”…. பாட்டிலில் பாம்போடு வந்த இளைஞர்…. தாம்பரம் ஹாஸ்பிட்டலில் ஷாக்….!

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதான மையூர் சாகீக் என்ற இளைஞர், தனது வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மரப்பலகையின்…

13 minutes ago

“டார்கெட் நீங்க இல்ல.. அவருதான்”…. பேர மட்டும் சொல்லுங்க.. விட்டுறோம்….. போலீசாரின் அதிர்ச்சி ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்….!

சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை முடியும் வரை…

23 minutes ago

“நானும் விஜய் ரசிகன்தான்”…. மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் ஓபன் டாக்…. கொந்தளிப்பில் அறிவாலயம்…. ஆடிப்போன ஸ்டாலின்…!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம்…

33 minutes ago

ரெய்டு நடக்கும் போது அன்பில் மகேஷ் கொடுத்த சீக்ரெட் கால்…. நேரில் விரைந்த கே.என். நேரு… கதவைச் சாத்திய போலீசார்…. அடுத்து நடந்த பரபரப்பு….!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…

45 minutes ago