“30 சீட்.. 300 கோடி.. மகனுக்கு மந்திரி பதவி”…. வாயடைத்துப்போன அமித்ஷா.. பாஜகவை அதிர வைத்த பிரேமலதாவின் மெகா டிமாண்ட்….!

By Nanthini on தை 23, 2026

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தேமுதிக இடம்பெறுவது குறித்து பெரும் இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணியில் இணைவதற்கு பாஜக மற்றும் அதிமுகவிடம் முன்வைத்துள்ள அதிரடியான நிபந்தனைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும் தேமுதிகவிற்கு நிலையான வாக்கு வங்கி இருப்பதாக நம்பும் பாஜக தலைமை, அக்கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது, தேமுதிக தரப்பில் சுமார் 30 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் செலவுகளுக்காக 300 கோடி ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமன்றி, மாநில அரசியலில் முக்கியத்துவம் பெறுவதோடு, தேசிய அரசியலிலும் தன் மகன் விஜய பிரபாகரனுக்கு ‘மத்திய அமைச்சர்’ பதவி வழங்கப்பட வேண்டும் என்ற பிரேமலதாவின் பிடிவாதம் பாஜக மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

   

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், தேமுதிகவின் இந்த ‘மெகா’ டிமாண்டுகளை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக, அதிமுகவிற்கே மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காத சூழலில், தேமுதிகவிற்கு அத்தகைய வாய்ப்பை எப்படி பெற்றுத் தர முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரேமலதாவின் இந்த நிபந்தனைகள் குறித்துப் பேசியுள்ள அரசியல் விமர்சகர்கள், கட்சியின் தற்போதைய கள எதார்த்தத்தை உணர்ந்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

   

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரேமலதாவுடன் தொலைபேசி வாயிலாகப் பேசியும், இதுவரை எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. ஒருபுறம் விஜயகாந்தின் முகத்திற்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்று தேமுதிக நம்பினாலும், மறுபுறம் அக்கட்சியின் தற்போதைய வாக்கு சதவிகிதம் மற்றும் செல்வாக்கைக் கணக்கிட்டு கூட்டணி கட்சிகள் பேரம் பேசி வருகின்றன. இறுதியில் பிரேமலதாவின் நிபந்தனைகளுக்கு பாஜக பணியுமா அல்லது தேமுதிக தனது கோரிக்கைகளைக் குறைத்துக் கொண்டு கூட்டணியில் இணையுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.