கேப்டனுக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப புடிச்ச விஷயம் இதுதான்.. நினைவு நாளில் பிரேமலதா பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

By Nanthini on மார்கழி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

விஜயகாந்த் திருவுருவபடத்திற்கு தொழு நோயாளிகள் கண்ணீர் மல்க அஞ்சலி… –  Madhimugam

   

அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த  ஆண்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

   

விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி!

 

இந்நிலையில் விஜயகாந்த் இறந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்து விட்ட நிலையில் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளில் அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் விஜயகாந்தை நினைவு கூறி வருகிறார்கள். சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். பிறகு அவருடைய நினைவிடத்திற்கு சென்ற பிரேமலதா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். அவருடன் மகன்களும் உடன் சென்று இருந்தனர்.

Chennai News Live Updates: விஜயகாந்த் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரேமலதா  மரியாதை

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா தனது கணவர் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து உள்ளார். அதாவது கேப்டனுக்கு சமைக்க தெரியுமா என்ற செய்தியாளர்கள் கேட்க அதற்கு பதில் அளித்த பிரேமலதா, கேப்டனுக்கு சமைக்கலாம் தெரியாது. ஆனா நான் ஏதாவது சமைச்சா வந்து பக்கத்துல நிப்பாரு. தோசை ஊத்துனா கரண்டியை வாங்கி அழகா சுத்துவாரு. வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்தா கூட நான் சாப்பாடு செஞ்சு கொடுத்தா அதை எடுத்துட்டு போய் அவர் தான் பரிமாறுவாரு. அந்த விஷயம் அவருக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த உலகத்திலேயே ரொம்ப புடிச்ச மற்றும் மகிழ்ச்சியான விஷயம் என்றால் மற்றவர்களுக்கு பரிமாறுவது தான் என்று கேப்டன் பலமுறை சொல்லி இருக்காரு என தனது கணவர் விஜயகாந்த் பற்றி பிரேமலதா நினைவு கூர்ந்து உள்ளார்.