நாடக கலைஞராகவும் தெருக்கூத்து கலைஞராகவும் இருந்த தாமரைச்செல்வி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாமரைச்செல்வி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியே கடைசி வரை முன்னேறினார். பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதனைப் போலவே பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல வருமானம் ஈட்டி வந்தார். இதனை தொடர்ந்து தாமரைச்செல்விக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கத் தொடங்கியது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது பல சீரியல்களிலும் இவர் நடித்து வருகின்றார்.
குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனைத் தவிர தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் தாமரைச்செல்வி அதில் சமையல் வீடியோ உள்ளிட்ட பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். கடந்த ஆண்டு தனது சொந்த ஊரில் புது வீட்டை கட்டிய தாமரைச்செல்வி தனது வீட்டின் புதுமனை புகு விழாவுக்கு சில பிரபலங்களையும் அழைத்து இருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தனது கணவர் பார்த்தசாரதி உடன் வெளிநாடு சுற்றுலா சென்று வரும் தாமரைச்செல்வி அடிக்கடி அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தாமரைச்செல்வி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது குடும்பத்தினருடன் சென்று அவர் புதிய கார் வாங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க