ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ருங்கவரப்புகோட்டை மண்டலத்தில் சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் 10 கிலோமீட்டர் தூரம் டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட மனிதாபிமானமற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிட்டம்பாடு கிராமத்தைச் சேர்ந்த கெரங்கி குமாரி என்ற பழங்குடியினப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.
அவரது கிராமத்திற்குச் சரியான சாலை வசதி இல்லாததால் அவசர ஊர்தி அங்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, வேறு வழியின்றி அவரது கணவர் பாஸ்கர் ராவ் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து குமாரியைத் தற்காலிக டோலியில் வைத்துச் சுமந்து சென்றனர்.
https://twitter.com/pulsenewsbreak/status/2121565641450963364/video/1
கரடுமுரடான பாதையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சிட்டம்பாடு கிராமத்திலிருந்து செனகபாடு கிராமத்திற்கு அவரைக் கொண்டு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து குடும்பத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
