உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குஷிபுரா பகுதியைச் சேர்ந்தவர் பாலக் (24). இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி தற்போது 4 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டுத் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த பாலக், தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருடன் அருகில் உள்ள உணவகத்திற்குச் சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு, உணவகத்திற்கு வெளியே இருந்த கடையில் ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு அனைவரும் சாலையோரம் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து பாலக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பலமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்த 10 பேரையும் மீட்டு மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கர்ப்பிணியான பாலக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த ஷிவம் என்ற இளைஞரைப் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…
ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…
தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் நேரடிக்…
தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அண்டை மாநிலமான கர்நாடகா ஒரே நாளில்…
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், 19 வயது மாணவி ஒருவர் கட்டிடத்தின்…