தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடு பிடித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீப காலமாகவே விஜய் கட்சியில் முக்கிய தலைவர்கள் பலரும் இணைந்த வண்ணம் உள்ளனர். அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த கையோடு நேற்று முன்தினம் நாஞ்சில் விஜயன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார்.
இவர்கள் இருவருக்குமே முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர்த்து அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் கசிந்து கொண்டிருக்கும் சூழலில் திமுகவுடன் ஆன கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக பிரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் தலைமை விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் சீட் கிடைக்காதற்காக திமுகவின் தலையிட காரணம் என அதிருப்தியில் இருந்த பிரவீன் சமீபத்தில் விஜயை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…