சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் மிக பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அதிமுக மற்றும் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளார். அதே சமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இப்படியான நிலையில் விஜய் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் செங்கோட்டையன் இணைந்த நிலையில் நேற்று நாஞ்சில் விஜயன் கட்சியின் இணைந்தார்.
இந்நிலையில் திமுக உடனான கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக, பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்கிரஸ் தலைமை விரைவில் நடவடிக்கையை எடுக்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால், தவெகவில் இணைய அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில், மயிலாடுதுறையில் சீட் கிடைக்காததற்கு திமுகவின் தலையீடு தான் காரணம் என அதிருப்தியில் இருந்த பிரவீன், சமீபத்தில் விஜய்யை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…