“அப்பா இல்லாத 4 பிள்ளைங்க…. தலை இருக்காதுனு மிரட்டுனாங்க.. சொன்னபடியே செஞ்சிட்டாங்க”…. கதறி அழும் தாய்…. நெஞ்சை பிழியும் வாக்குமூலம்….!

Spread the love

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகேயுள்ள தையூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (22) என்ற வாலிபர், படூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 21 வயது பெண்ணை கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். பெண்ணின் வீட்டிற்கு இக்காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து, பெண்ணின் தந்தையான தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினர் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 16-ஆம் தேதி, பிரவீனை சாலையில் மறித்த பெண்ணின் சித்தப்பா மணிகண்டன் காதலைக் கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், இருவரும் தீவிரமாகக் காதலிப்பதாக பிரவீன் உறுதியாகக் கூறியதை அடுத்து ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது அண்ணன் ஏழுமலை மற்றும் அவரது மகன் கௌதமை சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு ஆயுதங்களுடன் வந்த ஏழுமலை, கௌதமுடன் சேர்ந்து பிரவீனை கொடூரமாகத் தாக்கியதோடு, கத்தியால் தலை மற்றும் முகத்தில் கண்மூடித்தனமாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரவீனை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுப் போராடி வந்த பிரவீன், நான்கு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் பிரவீனின் தாய் பிரபாவதி அளித்த புகாரின் பேரில், கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் தமிழன்பன் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி ஏழுமலை, கௌதம், மணிகண்டன் மற்றும் நித்திஷ் ஆகிய 4 பேரைக் கைது செய்தது. தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.

மருத்துவமனையிலிருந்து பிரவீனின் உடல் இறுதிச்சடங்கிற்காகத் தையூருக்குக் கொண்டுவரப்பட்டபோது, ஆத்திரமடைந்த உறவினர்களும் பொதுமக்களும் வீட்டின் அருகே உடலை வாங்க மறுத்துச் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்தே பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடலைப் பெற்றுக்கொண்டனர். ஆணவக் கொலையாகப் பார்க்கப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மகனின் உடலை வைத்துக்கொண்டு பிரவீனின் தாய் பிரபாவதி வேதனையுடன் கூறுகையில், “அப்பா இல்லாமல் 4 பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தேன். வசதியோ, பணமோ இல்லாத எங்களைக் கேட்க யார் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தான் என் மகனைக் கொன்றுவிட்டார்கள். ‘உன் பையனுக்குத் தலை இருக்காது’ என்று ஏழுமலை போனில் அடிக்கடி மிரட்டுவார். என் மகன் இப்போதுதான் வேலைக்குச் செல்லத் தொடங்கினான்; எங்களின் ஒரே வாழ்வாதாரமாக இருந்தவனை இப்படிப் பறித்துவிட்டார்களே” எனக் கண்ணீர் மல்கக் கதறியது அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago