பிரபல இயக்குனரான பிரசாந்த் நீல் கடந்த 2014-ஆம் ஆண்டு கன்னடத்தில் ரிலீசான உக்கிரம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு 2022-ஆம் ஆண்டு கே ஜி எஃப் என்ற படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக மாறினார். இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது.
அதிக வசூல் செய்த கன்னட திரைப்படங்களின் பட்டியலில் கேஜிஎப் படம் இடம்பெற்றது. பின்னர் கடந்த 2023-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் சலார் படத்தை இயக்கினார். படத்தில் யஷ்ஷின் நடித்து மிரட்டலாக இருக்கும். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. சலார் படத்தின் 2-ஆம் பாகத்தை எடுத்து முடித்து விட்டு பிரசாந்த் நீல் கே.ஜி.எப் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பிரசாந்த் நீல் ஒரு கன்னட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களுக்கு பிடித்த டைரக்டர் யார் என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த பிரசாந்த் நீல் எனக்கு பிடித்த இயக்குனர் உபேந்திரா சார். நான் கன்னட நிகழ்ச்சியில் அமர்ந்துள்ளேன் என்பதற்காக இதை கூறவில்லை.
அவர் இயக்கிய Tharle Nan Maga, Om ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும். இந்த உலகத்திலேயே இந்த மாதிரி கதைக்களம் கொண்ட படங்களை யாராலும் இயக்கவே முடியாது. அது முடியாத காரியம் என கூறியுள்ளார். Tharle Nan Maga திரைப்படம் கடந்த 1992-ஆண்டு ரிலீஸ் ஆனது. Om திரைப்படம் கடந்த 1995-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.