மகனின் திருமண தேதியை லாக் செய்த நடிகர் நெப்போலியன்.. தனுஷ் அக்ஷயா எப்போது தெரியுமா..? வெளியான பத்திரிக்கை..

By Priya Ram on ஜூலை 27, 2024

Spread the love

ஹீரோ, வில்லன், குணசித்திர நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் நெப்போலியன். இவர் இதுவரை சினிமாவில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நெப்போலியன் இன் நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது நெப்போலியன் தனது மகனுக்காக குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன் ஜேசுதா தம்பதியினருக்கு தனுஷ் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

நெப்போலியன் மகன் திருமணம்.. சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள் கமெண்ட்..! – News18 தமிழ்

   

மூத்த மகன் தனுஷ் சிறு வயதில் இருந்தே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். தனது மகனுக்காக அமெரிக்காவில் ஒரு ராஜ்ஜியத்தையே நெப்போலியன் உருவாக்கியுள்ளார். சமீபத்தில் தான் தனுசுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

   

#image_title

 

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமண வேலைகளில் நெப்போலியன் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை மறக்க மாட்டேன் தமிழ்நாட்டில் இருந்து தான் மருமகள் வேண்டும் என நெப்போலியன் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயாவுக்கும் தனுசுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

நெப்போலியன் மகன் திருமணத்தில் இப்படியொரு விஷயம் இருக்கா? கொளுத்தி போட்ட பயில்வான் - மனிதன்

இந்த நிலையில் தனுஷ் அக்ஷயா திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பழங்கால ஓலைச்சுவடி வடிவத்தில் நேர்த்தியாக திருமண அழைப்பிதழை அச்சடித்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைத்து வருகிற நவம்பர் மாதம் 7-ஆம் தேதி இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sam Anto (@sam_anto_official)