பீகார் தேர்தல் நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் போட்டியிடுவார் என கூறப்பட்டது. இந்நிலையில், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
இந்த முடிவு என் அரசியல் பயணத்தின் நன்மைக்காக எடுக்கப்பட்டது. இருப்பினும் ஜன் சுராஜ் கட்சி மூலமாக மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வேன் என்று அறிவித்துள்ளார்.
