அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ராஷ்டிரிய ஜனாத தளம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய நித்தீஷ் குமாரை தொடர்ந்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பீகாரில் NDA கூட்டணி மீதான பிரசாந்த் கிஷோரின் குற்றச்சாட்டுகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜூன் முதல் தேர்தல் அறிவிப்பு வரை சுமார் 40,000 கோடிக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகவும் உலக வங்கி உதவியுடன் 14,000 கோடி அளவுக்கு திட்டங்களுக்கு பணம் திருப்பிவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு வரை கூட பெண்களின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
