ஆண்டுக்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும்.. ரூ.2 லட்சம் காப்பீடு தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!

By Nanthini on மார்கழி 23, 2024

Spread the love

மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது நாட்டின் சாமானிய மக்களுக்கான சிறந்த விபத்து காப்பீட்டு திட்டம் ஆகும். இந்த திட்டம் ஒரு வருடத்திற்கான தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டமாக உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படலாம். விபத்து காரணமாக இறப்பு அல்லது உடல் ஊனம் போன்ற பிற காரணங்களால் ஏற்படும் திடீர் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளின் போது உதவியாக இருக்கக்கூடிய திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ஆண்டு பிரீமியமாக 20 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். குறைந்த அளவு வருமானம் கொண்ட மக்களுக்கு அவர்களுக்கான வாழ்க்கைக்கு பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) | Benefits & Features for 2025

   

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ஜூன் 1 முதல் மே 31ஆம் தேதிக்குள் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு அடுத்த வருடத்தில் இருந்து தொடங்கும். 18 முதல் 70 வயது வரை உள்ள, வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் தனிநபர் அல்லது கூட்டுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர்கள். ஆட்டோ டெபிட் மூலம் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 20 ரூபாய் வீதம் ப்ரீமியம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயனாளி விபத்து, இயற்கை பேரழிவு, கொலையால் ஏற்படும் மரணம் உள்ளிட்ட வேறு சில காரணங்களால் இறந்தால் அவருடைய நாமினி அல்லது குடும்ப உறுப்பினர் 2 லட்சம் ரூபாய் பலன் பெற முடியும்.

   

PMJJBY: பிரீமியம் தொகை அட்டவணை, தொகை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை  மற்றும் பலன்கள்

 

இது தவிர விபத்து ஏற்படும் நிலையில் இரண்டு கண்களும் முழுமையாக மற்றும் ஈடு செய்ய முடியாத இழப்பு அல்லது இரண்டு கைகள் அல்லது கால்கள் செயலிழந்தால் அல்லது ஒரு கண் பார்வை இழப்பு மற்றும் கைகள் அல்லது கால்கள் செயலிழப்பு ஆகியவற்றுக்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும். மேலும் விபத்து காரணமாக ஒரு கண் முழுமையாகவும் சரி செய்ய முடியாததாகவும் பார்வை இழந்தால் அல்லது ஒரு கை அல்லது கால் செயல் இழந்தால் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா.. ரூ.1,134 கோடி இறப்பு பலனாக  க்ளைம்..! | Coronavirus impact: death claims worth Rs.1,134 crore under  Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana in ...

விபத்து மற்றும் குற்றத்தினால் ஏற்படும் மரணம் அல்லது ஊனத்திற்கு எதிராக காப்பீட்டுத் தொகையை பெற காவல்துறையின் எஃப் ஐ ஆர் என்ற முதல் தகவல் அறிக்கை தேவை. இந்த திட்டத்தில் பதிவு செய்யும் பயனாளி ஆண்டு பிரீமியமான 20 ரூபாய் என்ற தொகையை ஆட்டோ டெபிட் வசதி மூலமாக கணக்கு தாரரின் வங்கி அல்லது அஞ்சல் அலுவலக கணக்கில் இருந்து ஒரு தவணையில் கழிக்கப்படும். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற பொது காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றது. நீங்களும் இந்த திட்டத்தில் பயன் அடைய விரும்பினால் உடனே இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள்.