Game Over… கெட்ட பையன் சார் அவன்… கமல் மற்றும் vijaytv-யை சாடிய பிரதீப்.. வைரல் ஆகும் பதிவு..

By Begam on கார்த்திகை 11, 2023

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 42 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் ரெட் கார்டுடன் ‘இவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்ற அவப்பெயருடன்  வெளியேற்றப்பட்டவர் தான் போட்டியாளர் பிரதீப்.

   

வீட்டில் உள்ள சக ஹவுஸ்மேட்களால் டார்கெட் செய்யப்பட்டு, கமலஹாசனால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தற்பொழுது வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இவர் திரும்பவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது. எனினும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

   

 

இணையத்தில் தான் பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர் என்று பார்த்தால், பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் இந்த பிரச்சனை நடைபெற்றது. அர்ச்சனா,  விசித்ரா,  தினேஷ் மூவரும் பிரதீபுக்கு ஆதரவாக பேசி மாயா gang எதிர்த்து வருகின்றனர். இப்படி மாறி மாறி பிக் பாஸ் வீட்டிற்குள்ளும், வெளியிலும் பிரதீப் ஹாட் டாபிக்காக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதில் தன்பங்கு ஏதாவது இருக்கவேண்டும் என்பது போல பிரதீப்பும் அவ்வப்பொழுது ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு இணையத்தை பிசியாக வைத்துள்ளார்.

அவர் வெளியிடும் பதிவுகள் அனைத்தும் வைரலாகி வருகிறது. தற்பொழுது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தான் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்’ அதாவது இவர் வெளியிட்ட பதிவில், ‘ Game over’ என்றும், ரெண்டு கை ரெண்டு கால் இல்லைனா கூட காலின்றவன் பொழைச்சுப்பான் சார். கெட்ட பையன் சார் அவன். வாழ்த்திய மனங்களுக்காக என் வாழ்க்கையை வழங்கி விட்டேன். நல்லா இருங்க’ என்றும் ஹாஸ்டேக்குகளை வெளியிட்டுள்ளார். இதோ அவரின் பதிவு…