கபடி.. கபடி.. 48 வயதில் ‘கில்லி’ விஜய் போல கபடி விளையாடிய நடிகை ரோஜா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

By Begam on கார்த்திகை 11, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. நடிகை ரோஜா இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரோஜா, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

   

இதனைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜா 2014 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார்.

   

 

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு அவர் இரண்டு முறை எம்எல்ஏ தேர்தலில் ஜெயித்து தற்போது சுற்றுலா துறை அமைச்சராக ஆந்திர அரசியலில் கலக்கி வருகிறார். சமீபத்தில் கூட நடிகை ரோஜாவை அமைச்சர் ஒருவர் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இப்படி தன் அரசியல் வாழ்க்கையில் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

நடிகை ரோஜா எப்பொழுதும் விளையாட்டில் ஆர்வம் உடையவர். ஏற்கனவே பலமுறைகள் மாணவர்களுடன் விளையாடிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி தற்பொழுது நடிகை ரோஜா இளைஞர்களுடன் கபடி கபடி என உற்சாகமாக விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…