தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷை வைத்து திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆதிக் ரவிச்சந்திரன். இதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் விரைவில் காலியாகி விடுவார் என பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஆதிக் நடித்திருந்தார் . இந்த சூழலில் அவர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆதி ரவிச்சந்திரன் பிஸியான இயக்குனராக பலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதனிடையே ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.
ஏற்கனவே தன்னுடைய உறவினரான குணால் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய முதல் கணவரை பிரிந்ததற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதாவது பிரபு சகோதரி தேன் குழலில் மகனை தான் ஐஸ்வர்யா முதலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் பிரபுவுக்கும் அவருடைய சகோதரிக்கும் சொத்து தகராறு இருந்த நிலையில் சொத்தை பிரித்துக் கொடுக்காததால் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரி வழக்கு தொடர்ந்தார்.
இதனால் தேன்குடலையும் பிரபுவும் பேசிக் கொள்வதில்லை. அதேசமயம் அவரின் மகனான குணால் தன்னுடைய தாத்தா சொத்தை மாமா பிரபு ஒழுங்காக பிரிக்கவில்லை என்று கோபத்தில் இருந்து உள்ளார். மேலும் என்னால் இந்தியாவுக்கு எல்லாம் வர முடியாது என்று சொல்லி வெளிநாட்டிலேயே இருந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் என்னுடைய அம்மா என்ன சொல்கிறாரோ அதை தான் செய்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். இப்படியான நிலையில் இரண்டு பேரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…
பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…
முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…