#image_title
80’ஸ் , 90’ஸ் கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரபுவிற்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
நடிகர் விக்ரம் பிரபு 2012 இல் வெளியான ‘கும்கி’ திரைப்படம் வழியாக திரையுலகில் அறிமுகமானார். தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.
2009 இல் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு குணால் என்பவரிடம் திருமணம் நடைபெற்றது. குணால் வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
திருமணத்திற்கு பின்னர் கணவர் குணாலுடன் அமெரிக்காவில் செட்டில் ஆன ஐஸ்வர்யா, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து, தற்போது பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் லெஜண்ட் சரவணன் , நடிகர் விஷால், பாண்டே, ரஜினி , கமல்ஹாசன் , நடிகர் அஜித் மனைவி ஷாலினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
தற்பொழுது இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…