Categories: சினிமா

அந்த நடிகை மட்டும் ஜோடியா வேண்டவே வேண்டாம்னு சொன்ன பிரபுவின் மனைவி.. அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துட்டேன்.. இயக்குனர் வி.சேகர் பகிர்ந்த சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான அம்சம் உள்ள திரைப்படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் வி சேகர். இவருடைய திரைப்படங்களுக்கு தாய்மார்களின் ஆதரவு எப்போதுமே உண்டு. அதன்படி பிரபுவின் திரைப்படம் ஒன்றில் குஷ்பு நடிப்பதாக இருந்த நிலையில் அது பிரபுவின் மனைவிக்கு பிடிக்காமல் போக இயக்குனரிடமே வந்து அதை கூறியுள்ளார். இது தொடர்பாக இயக்குனர் வி.சேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், நான் இயக்குனரான பிறகு பிரபுவை வைத்து படம் எடுக்க முடியல. பிரபு, என்ன பிரதர் நீ அப்பாவுக்கு ரசிகராமே, எங்க வீட்ல இருக்குற எல்லோரும் சொல்றாங்க, நல்ல பேமிலி படத்துல நடி என்று. என்னை வைத்து படம் பண்ணலாமே என்று சொன்னாரு. அப்போதான் அவருடைய சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி இருந்தது. குஷ்பு கூட நடித்த சில படங்கள் ஓடி இருக்கு.

 

ஒரு படம் பண்ணலாம் என்று பிளான் பண்ணேன். 5 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துட்டாங்க. நான் சொன்ன கதை பிரபுவுக்கு பிடித்து போக அவரும் சரி பண்ணலாம் என்று கூறிவிட்டு ஒரு நாள் என்னை வீட்டுக்கு வர சொன்னாரு. வீட்டுல பின்னாடி வழியா என்ன கூட்டிட்டு போனாரு. ஏன் என்று கேட்டதும் அங்கு அப்பா இருப்பார் என்று சொன்னாரு. அவரை பார்ப்பதற்காக தான் நான் வரேன் என்று சொன்னதும் பிறகு முன் பக்கமாக கூட்டிட்டு போனாரு. சிவாஜியை பார்த்ததும் பிரபுவை வைத்து படம் பண்ணலாம் என்று இருக்கேன் என்று சொன்னதும் ஓரளவுக்கு சுமாரா நடிப்பான் நீ என்னைய வச்சு படம் பண்ணலாமே என்று கேட்டார்.

பிறகு பிரபு அம்மா என்னை வந்து பார்த்து உங்க படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்களோட ரசிகை என்று சொன்னார்கள். பின்னர் பிரபு மனைவி வந்து நான் தான் சார் பேமிலி படத்துல நடிக்க சொன்னேன் என்று சொன்னாங்க. பிறகு பிரபு வெளியே போனதும் பிரபுவின் மனைவி என்னிடம் வந்து நைசா பேசுனாங்க. யாரு ஹீரோயின் என்று கேட்டதும் குஷ்பூ என்று சொன்னேன். இல்ல வேண்டாம் வேற யாரையாவது ஹீரோயினியா போடுங்க கொஞ்சம் கிசுகிசு வந்துட்டு இருக்கு. படத்தின் பெயர் நம்ம வீட்டு கல்யாணம் அதனால ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் கல்யாணம் பண்ண போறதா பேசுறாங்க.

அது உங்க படமா ஆயிடக்கூடாது என்று சொன்னாங்க. பிறகு பிரபுவிடம் குஷ்பூவை மாற்றிவிட்டு வேறு ஹீரோயின் போடலாம் என்று சொன்னதும் ஏன் என்று கேட்டார். எதுக்கு தேவையில்லாமல் என்று சொன்னதும் சினிமா தான் சார் என்று சொன்னாரு. நான் வேண்டாம் என்று சொன்னதும் அவருக்கு ஹீரோயின் மாற்றுவதில் விருப்பமே இல்லை. அதான் சார் என் முடிவு என்று சொல்லி அட்வான்சை திருப்பிக் கொடுத்துட்டு வந்துட்டேன் என்று இயக்குனர் வி சேகர் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

வரலாற்று சாதனை: தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளராக சாந்தி நியமனம்..! யார் இவர்..? இவருடைய பவர் என்ன..?

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…

7 minutes ago

யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

10 minutes ago

₹840-க்கு சொல்லிவிட்டு ₹640-க்கு ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. செல்போன் பேசிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் அரங்கேறிய நூதன மோசடி..!!

ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…

12 minutes ago

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

25 minutes ago

“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…

27 minutes ago

லஞ்சப் பணத்திற்காக இப்படியா செய்வாங்க?.. சிறுமியின் காலை மீண்டும் உடைத்த டாக்டர்.. அரசு மருத்துவனையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…

27 minutes ago