விவாகரத்திற்கு பிறகும் அப்படித்தான் இருக்கோம்.. நான் எதுக்கு அவர தப்பா பேசணும்.. பிரபுதேவா முன்னாள் மனைவி ஓபன் டாக்..!

By Nanthini on சித்திரை 14, 2025

Spread the love

பொதுவாகவே சினிமா துறையில் ஒன்றாக வேலை செய்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது வழக்கம் தான். அப்படி திருமணம் செய்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பயணிக்கிறார்கள். ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே விவாகரத்து பெற்ற பிரிந்து விடுகின்றனர். அந்த வரிசையில் நடிகர் பிரபுதேவாவும் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்தார். ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து அதன் பிறகு டான்ஸ் மாஸ்டராகவும், நடிகர் மற்றும் இயக்குனர் என பல முகங்களை கொண்ட பிரபுதேவா தன்னுடன் குரூப் டான்ஸராக இருந்த ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.

மகன்களின் வாழ்க்கை! பிரபுதேவா இப்படிப்பட்டவர் தான்..டைவர்ஸ்க்கு பிறகு மனம்  திறந்து பேசிய முதல் மனைவி | Prabhu Deva's Ex-Wife Opens Up About Their  Past, His Behavior ...

   

 

   

இதில் மூத்த மகன் 15 வருடங்களுக்கு முன்பே உடல் நல குறைவால் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு இரண்டு மகன்களையும் பிரபு தேவா பாதுகாத்து வளர்த்து வருகின்றார். இதனிடையே வில்லு திரைப்படத்தை பிரபு தேவா இயக்கிய போது அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவோடு காதல் ஏற்பட்டது. அப்போது நயன்தாரா தன்னுடைய கையில் பிரபு தேவாவின் பெயரை டாட்டு போட்டு இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் பல நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் பிரபுதேவா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து இருந்தார். பிறகு சில வருடங்களிலேயே நயன்தாராவோடு பிரச்சனை ஏற்பட அவர் பிரிந்து விட்டார்.

 

அடுத்தவர் கணவரை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்' -  பிரபுதேவா மனைவி ஆவேசம்

. அதன் பிறகு பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது.  இப்படியான நிலையில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரபுதேவாவுக்கு எங்கள் பிள்ளைகள் என்றாலே உயிர் தான். அதுபோல எனது இரண்டு மகன்களும் அப்பா மீது மிகப்பெரிய பாசம் வைத்திருக்கின்றனர். எங்கள் மகன்களை நாங்கள் எப்போதும் பாப்பா என்று அழைப்பதும் வாடி போடி என்று கூப்பிடுவதும் தான் வழக்கம். பசங்க எங்கேயாவது வெளியே போக வேண்டும் என்றால் என்னிடமும் அவருடைய அப்பாவிடமும் அனுமதி கேட்டுட்டு நாங்கள் சம்மதம் சொன்ன பிறகுதான் போவாங்க. எனக்கும் பிரபுதேவாவுக்கும் விவாகரத்து ஆய் இருந்தாலும் பிரச்சனை எல்லாம் ஒன்றும் கிடையாது.

விவாகரத்துக்கு பின் பிரபுதேவாவுடன் பேசிட்டு இருக்கேன்!! முன்னாள் மனைவி ரமலத்

அன்று ஏதோ ஒரு சூழலில் அப்படி விவாகரத்து நடந்து விட்டது. நான் அனைத்தையும் ஏற்றுக் கொண்டேன். என் பிள்ளைகளுக்காக அந்த சூழலை நான் ஏற்றுக் கொண்டேன். இருந்தாலும் பிள்ளைங்க விஷயத்துல இன்னைக்கு வரைக்கும் பிரபுதேவா ரொம்ப சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு. இன்னைக்கு நானும் பிரபுதேவாவும் ஒரு நல்ல நண்பர்களாக இருக்கோம். என்னைப் பற்றி அவர் எப்போதுமே தவறாக பேசியது இல்லை. நானும் அவரை ஒருபோதும் விட்டுக் கொடுத்து பேசமாட்டேன். எதுவாக இருந்தாலும் உடனடியாக என்னிடமும் மகன்களிடமும் பேசி விடுவார். சிங்கிள் பேரண்டிங் என்பது கஷ்டம் தான். ஆனால் அதை சமாளித்து விட்டேன். பிரபுதேவாவை பொருத்தவரை அவர் மகன்களுக்கு மிக சிறந்த தகப்பனார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். பிறகு ஏன் நான் அவரைப் பற்றி தவறாக பேச வேண்டும். அவர் பற்றி தவறாக பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. அவர் ஒரு நல்ல மனிதர் என்று தன்னுடைய முன்னாள் கணவர் பிரபுதேவா பற்றி ரமலத் உருக்கமாக பேசியுள்ளார்.