பெண் பார்க்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட அவமானம்.. ஒன்றல்ல இரண்டல்ல 728 படங்களில் நடிக்க குமரி முத்துவை உயர்த்திய அந்த சம்பவம்..!

By Nanthini on ஏப்ரல் 14, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் குமரிமுத்து. கடந்த 1940 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1980 ஆம் ஆண்டு தன்னுடைய 40 வயதில் காலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, ஊமை விழிகள் மற்றும் மனைவி ரெடி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அதனைப் போலவே மகேந்திரன் மற்றும் பாலு மகேந்திரா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்த பிரபலமான குமரிமுத்து தன்னுடைய வித்தியாசமான சிரிப்புக்கு பெயர் பெற்றவர்.

comedian actor kumarimuthu 8th death aniversary on february 28 | Actor Kumarimuthu: அந்த சிரிப்ப கேட்டாலே முகம் நியாபகத்துக்கு வரும்... நடிகர் குமரி முத்துவின் நினைவு தினம் ...

   

இவருடைய சிரிப்பு சத்தத்தை வைத்து இவரை அடையாளம் காணும் அளவுக்கு வித்தியாசமான திறமைசாலியாக இருந்த குமரிமுத்தூர் ரஜினி தொடங்கி விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படம் தான் இவர் நடித்த கடைசி திரைப்படம். காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பில் முத்திரை பதித்த குமரிமுத்து தான் நடிகனாக மாறிய சூழல் எப்படி வந்தது என்பது குறித்து ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். அதில், நான் ஒரு பெண் பார்க்க சென்றேன்.

   

ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க".. பிரபல நகைச்சுவை நடிகரின் கல்லறையில் பொறிக்கப்பட்ட வசனம்..! - Update News 360 | Tamil News Online

 

பெண்ணை எனக்கு பிடித்திருந்தது. பெண்ணும் என்னை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். மற்றவர்கள் மாப்பிள்ளைக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு மாத்திரையை பிடித்து இருக்கிறதா என்று கேட்டனர். அப்போது அந்தப் பெண், எங்க அவனை பிடிச்சிருக்கு, அவன் வடக்க பார்க்கிற மாதிரி தெற்கே பார்க்கிறான், எங்கேயோ பாக்குற மாதிரி என்னை பார்க்கிறான், நான் அவனை கட்டிக்கிட்டேன் என்ன இழவு கொட்ட என்று கேட்டுள்ளார்.

Tamilstar on X: "#குமரிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்! # Kumarimuthu @realsarathkumar http://t.co/ZDkZOFuU0D http://t.co/5Pylq88fl4" / X

அந்தப் பெண் கேட்ட அந்த ஒரு வார்த்தை என்னை இவ்வளவு பெரிய இடத்தில் வந்து உட்கார வைத்துள்ளது. அதனால் தான் சொல்கிறேன் வார்த்தைகளை மட்டும் பார்த்து பேச வேண்டும். ஒரு சொல் வாழ வைக்கும், ஒரு மனிதனை தாழ்த்தும். அதனால் அந்தப் பெண் சொன்ன அசிங்கமான வார்த்தைகள் என்னை இவ்வளவு பெரிய சினிமா நடிகராக 728 திரைப்படங்களில் நடித்த குமரி முத்துவாக உயர்த்தியுள்ளது என அந்த பேட்டியில் குமரிமுத்து கூறியுள்ளார்.