தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர்தான் பவர் ஸ்டார் சீனிவாசன் .தன்னுடைய படங்களை விளம்பரப்படுத்துவதற்காக பணத்தை அள்ளி வீசியவர். அந்த வகையில் அதிர்ஷ்டம் கை கொடுத்ததால் இவருக்கு வெளிச்சம் கிடைத்தது. திரை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னேறினார். இதனை அடுத்து திரையுலகில் பிரபலமானது போதாது என்று அரசியலில் களம் இறங்கி விசிகவில் இணைந்தார் அப்போதுதான் அவருக்கு திருமாவளவன் பவர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தார். இந்நிலையில் திடீர்ன்னு பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் மருத்துவர்கள் தன்னை பரிசோதனை செய்து எனக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக சொல்லுகிறார்கள். இதனை அடுத்து இன்று டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகு என்ன சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்வார்கள். மருத்துவமனை யை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை என்று ஏன் நினைக்க வேண்டும். எங்கு நல்ல சிகிச்சை கிடைக்கிறது என்பதுதான் முக்கியம்.

அந்த வகையில் கிண்டி மருத்துவமனையில் வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளது . உடலில் எந்த விதமான பாதிப்பும் இல்லை . ஆனால் கிட்னி பிரச்சனைக்கான அறிகுறிகள் தெரிந்ததையடுத்து பெரிய அளவு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே நல்ல சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று வந்திருக்கிறேன். மருத்துவர்கள் மருத்துவமனையில் சேர சொன்னதையடுத்து உடனடியாக சரி செய்ய சொன்னதால் மருத்துவமனையில் தற்போது இருக்கிறேன்.

தற்போதைக்கு பொருளாதார அளவில் என் கை ஒடுங்கிவிட்டது. இதற்கு காரணம் சிலர் என்னை ஏமாற்றியதும் செய்த துரோகங்களும் என்னை மிகப்பெரிய கடனாளியாக மாற்றி இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பெரிய கடன்கள் இல்லை. நிறைய பேரை நம்பி நிறைய ஏமாந்து விட்டேன். நம்பிக்கை துரோகிகள் எனக்கு அதிகம். அதனால் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். எனவே இந்த நிலைமைக்கு வேறு சரியாகும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். எப்போதும் உற்சாகமாக இருப்பேன். கோடிக்கணக்கில் பணம் உள்ளது என்பதை தனியார் மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என்பதையும்.
