கார்த்திக் போதை ஊசி போட்டுகிட்டு ஷூட்டிங் வரமாட்டான்.. புலம்பித் தள்ளிய பிரபல தயாரிப்பாளர்!

By vinoth on மார்கழி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனான கார்த்திக் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் கார்த்திக். அவருக்கு திருப்புமுனையாக வருஷம் 16, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் , உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார்.

அழகான தோற்றம் கொண்ட கார்த்திக் 80 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். சினிமாவில் மட்டுமில்லாமல் கார்த்திக் நிஜ வாழக்கையிலும் ஒரு ப்ளே பாயாகவே வலம் வந்துள்ளார். பல நடிகைகளோடு அவருக்கு தற்காலிக காதல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அது சம்மந்தமாக கிசுகிசுக்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பிக் கிளப்பின. அதன் பின்னர் தன்னோடு நடித்த ராகினி மற்றும் அவர் தங்கை ஆகிய இருவரையுமே அவர் திருமணம் செய்துகொண்டார்.

   

   

கார்த்திக்கின் திறமைக்கு அவர் இப்போதும் முன்னணி நடிகராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரின் சில பழக்க வழக்கங்கள்தான் அவரை சினிமாவில் இருந்து வெளியேற்றின.கார்த்திக்குக்கு இடையில் போதை பழக்கம் அதிகமானதால் அவரால் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் அவருக்குப் பல பட வாய்ப்புகள் நழுவிச் சென்றன.

 

இந்நிலையில் கார்த்திக்கை வைத்து சீனு என்ற படத்தைத் தயாரித்த செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் அவர் செய்த அட்டூழியங்கள் பற்றி புலம்பித் தள்ளியுள்ளார். அதில் “நான் சீனு படம் எடுத்த போது படாத பாடுபட்டேன். கார்த்திக் ஷூட்டிங்கே வரமாட்டான். அவன் அப்ப எப்போதும் போதையிலேயே இருப்பான். போதை ஊசி போட்டுகிட்டு வீட்டுலயே கிடப்பான். போய் எழுப்புனாலும் வரமாட்டான். அந்த படம் எடுக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு” எனப் புலம்பித் தள்ளியுள்ளார்.