வாக்கு எண்ணிக்கை ஸ்டார்ட்…! 62 மையங்களிலும் தபால் வாக்குகள் பிரிப்பு… முன்னிலை யாருக்கு…?

By Devi Ramu on வைகாசி 4, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கான முதற்கட்டப் பணிகள் மிக விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், முதலில் அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் அளித்த தபால் வாக்குகள் எண்ணும் பணி தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. இன்னும் அரை மணி நேரத்தில், தபால் வாக்குகளின் அடிப்படையில் எந்தக் கட்சி முன்னிலையில் உள்ளது என்ற ஆரம்பக்கட்ட விவரங்கள் வெளியாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தபால் வாக்குகளை எண்ணுவதில் ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டால், நேரத்தை வீணடிக்காமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்டுள்ளது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையங்களில் தனித்தனிப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி முடிவால், இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் முன்னிலை நிலவரங்களும் வழக்கத்தை விட விரைவாகவே வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.