“தேர்தல் வெற்றி நம் பக்கம்” திருப்பதியில் நடிகை திரிஷா கொடுத்த ரியாக்ஷன்… வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on வைகாசி 4, 2026

Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற நடிகை த்ரிஷாவைச் சுற்றி அரசியல் குரல் ஒலித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு தரிசனம் செய்த பிறகு, அவர் பொன்னடையுடன் வெளியே வந்தபோது தெலுங்கு ரசிகர் ஒருவர் த்ரிஷாவைப் பார்த்து, “மேடம், ரிசல்ட் பக்கா மனதே” (முடிவு உறுதியாக நமக்குச் சாதகமாகத்தான் இருக்கும்) என்று உற்சாகமாகக் கூறியுள்ளார்.

அரசியல் ரீதியான இந்தக் கருத்தைக் கேட்டு நடிகை த்ரிஷா எவ்விதப் பதிலும் சொல்லாமல், மெல்லிய புன்னகையுடன் அங்கிருந்து கடந்து சென்றார். த்ரிஷாவின் பிறந்தநாளான மே 4-ம் தேதியான (இன்று), தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது.