“தினமும் ரூ.50 சேமித்தால் ரூ.1.7 லட்சம்” போஸ்ட் ஆபீசின் அதிரடி திட்டம்… மிஸ் பண்ணாம உடனே ஜாயின் பண்ணுங்க…!!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி (RD) திட்டத்தின் மூலம் பொதுமக்கள் சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தைப் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ், மாதம் ₹28,000 வீதம் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்தால், தற்போதைய 6.7% வட்டி விகிதத்தின்படி (கூட்டு வட்டி), முதிர்வு காலத்தில் சுமார் ₹20 லட்சம் வரை பெற முடியும். அரசு உத்தரவாதம் கொண்ட பாதுகாப்பான முதலீடு என்பதால் நடுத்தர வர்க்கத்தினரிடையே இத்திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெரிய தொகையைச் சேமிக்க இயலாதவர்களுக்காக எளிய சேமிப்பு முறையும் இதில் உள்ளது. தினமும் வெறும் ₹50 (மாதம் ₹1,500) வீதம் சேமித்து வந்தால், 5 ஆண்டுகளின் முடிவில் வட்டியுடன் சேர்த்து சுமார் ₹1.7 லட்சம் வரையிலான தொகையைப் பெறலாம். இத்திட்டத்தில் சேர குறைந்தபட்சம் மாதம் ₹100 முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம்.

   

இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என்றாலும், அவசரத் தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சேமிப்புத் தொகையைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் மத்திய அரசால் மாற்றி அமைக்கப்படும். இத்திட்டத்தில் சேர விரும்புவோர் அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகித் தங்களின் சேமிப்பைத் தொடங்கலாம்.