பெரும்பாலும் மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் சிறு பணத்தை சேமித்து பணம் பாதுகாப்பாக இருப்பதோடு நல்ல வருமானம் பெறக்கூடிய இடத்தில் முதலீடு செய்ய திட்டமிடுகிறார்கள். இதற்கு வங்கிகளை தவிர போஸ்ட் ஆபீசிலும் நல்ல திட்டங்கள் இருக்கிறது. அத்தகைய ஒரு சிறந்த திட்டம் தான் தபால் நிலைய நேர வைப்பு திட்டம். இந்த திட்டத்தின் முதலீட்டின் மீதான வட்டியிலிருந்து 4 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்க முடியும். அதிக வட்டியை தவிர இது பல சிறந்த நன்மைகளையும் கொடுக்கிறது. 5 வருடங்களுக்கு இதில் முதலீடு செய்வதற்கு 7.5 சதவீதம் வட்டியை வழங்குகிறது .ஒருவர் வெவ்வேறு காலங்களுக்கு இதில் முதலீடு செய்யலாம் மற்றும் முதலீட்டுக்கான வெவ்வேறு வட்டி விகிதங்களில் பெறப்படுகிறது.
ஒரு வருடம் முதலீடு செய்தால் 6.9% வட்டியும், 2 வருடத்திற்கு பணத்தை முதலீடு செய்தால் 7 சதவீதம் வட்டியும், மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7.1 சதவீதம் வட்டியும், 5 வருடங்களுக்கு 7.5% வட்டியும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயுடன் கணக்கை திறக்கலாம். முதலீட்டில் வட்டி ஆண்டுதோறும் சேர்க்கப்படும். ஒரு முதலீட்டாளர் ஐந்து வருடங்களுக்கு 5 லட்சத்தை முதலீடு செய்தால் அவருக்கு ரூ.2,24,974 வட்டி கிடைக்கும். மொத்தமாக ரூ.7,24,974 கிடைக்கும். இந்த திட்டம் மிகவும் பிரபலமானது. ஏனெனில் வட்டியிலிருந்து மட்டுமே லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க முடியும். பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் கணக்கை அவருடைய பெற்றோர் மூலமாக திறக்கலாம்.
