பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோருக்கு உதவும் பொருட்டு இந்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்திற்கு தற்போது 8.2% வட்டி விதிக்கப்பட்டுள்ளது. 10 அல்லது 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அக்கவுண்டை திறந்து ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் பணம் டெபாசிட் செய்ய வேண்டும்.
அதிகபட்சமாக 1 1/2 லட்ச ரூபாயை டெபாசிட் செய்யலாம். அக்கவுண்ட் திறந்த தேதியில் இருந்து 15 வருடங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். அந்த பணம் 21-வது வருடத்தில் மெச்சூரிட்டி ஆகி விடும். அந்த பெண் பிள்ளைக்கு 21 வயதிற்கு முன்பாக திருமணம் ஆகிவிட்டால் அந்த அக்கவுண்ட் மூடப்படும். ஒரு பெண் பிள்ளையின் பெயரில் ஒரே ஒரு சுகன்யா சம்ரிதி யோஜனா அக்கவுண்ட் மட்டுமே திறக்க முடியும்.
இரண்டு வெவ்வேறு பெண் பிள்ளைகளுக்கு இரண்டு அக்கவுண்டுகள் வரை பெற்றோர் திறக்கலாம். சட்டபூர்வமான பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர்கள் மட்டுமே இந்த திட்டத்தை நிர்வகிக்க அனுமதிக்கப்படுவார்கள். பெண் குழந்தைகளின் தாத்தா பாட்டி இந்த அக்கவுண்ட்டை திறக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் அல்லது நீதிமன்றம் நியமிக்கப்பட்ட சட்டபூர்வமான பாதுகாவலரின் பெயரில் அந்த அக்கவுண்ட் டிரான்ஸ்பர் செய்யப்பட வேண்டும்.
பெண் பிள்ளைக்கு ஐந்து வயதாக இருக்கும்போது கணக்கை தொடங்கி வருடம் தோறும் 1.5 லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால் அந்த தொகை மெச்சூரிட்டியாகும் போது 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் இருக்கும். அதற்கு 8.2% வட்டி கணக்கிடும்போது தோராயமாக 70 லட்ச ரூபாய் பணம் கிடைக்கும்.
