தபால் அலுவலக திட்டங்கள் சேமிக்க விரும்புவர்களுக்கு சிறந்த தேர்வாகவும் நல்ல லாபத்தையும் வழங்கக்கூடியதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த திட்டங்களில் முதலீடு செய்யக்கூடிய உங்களுடைய பணம் பாதுகாப்பானதாக இருக்கும். தபால் அலுவலகங்களில் RD மற்றும் FD ஆகிய திட்டங்கள் பிரபலமானதாக உள்ளது. அதில் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் தங்களால் முடிந்த அளவு தொகையை ஒருவர் மாதந்தோறும் டெபாசிட் செய்யலாம். போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சிறிய தொகையை டெபாசிட் செய்து ரிட்டர் ஆக மிகப்பெரிய லாபம் கிடைக்கும். முதலீடு செய்த தொகையுடன் வட்டியும் உதிர்வு காலத்திற்குப் பிறகு உங்களுக்கு கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாய் டெபாசிட் செய்து தபால் அலுவலக RD திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.
இந்த திட்டத்திற்கு தற்போது தபால் அலுவலகத்தில் 6.7 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஐந்து வருடங்கள் தொடர்ந்து ரெக்கார்டிங் டெபாசிட்டில் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒருவர் மாதந்தோறும் 2000 ரூபாய் முதலீடு செய்யும் போது ஐந்து வருட டெபாசிட் செய்யப்பட்ட தொகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இதற்கு 6.7 சதவீதம் வட்டி விகிதத்தில் 22 ஆயிரத்து 732 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதன் மூலமாக முதிர்வு காலத்திற்கு பின்னர் 1,42,732 ரூபாய் மெச்சூரிட்டி தொகையாக முதலீட்டாளர்கள் பெறலாம். இந்த திட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு மாதம் தோறும் 3000 ரூபாய் முதலீடு செய்யும் போது ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையாக இருக்கும்.
இதற்கு வட்டி மூலமாக 34.097 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மெச்சூரிட்டிக்கு பிறகு 2,14,097 ரூபாயை நீங்கள் பெறலாம். அதனைப் போலவே ஐந்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்தும் போது ஐந்து ஆண்டுகளில் உங்களுடைய முதலீடு மூன்று லட்சம் ரூபாயாக இருக்கும். வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 3,56,830 ரூபாயை முதலீட்டாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். குறைந்த முதலீட்டில் அதிகம் சேமிக்க வேண்டும் என்று விரும்பினால் உடனே இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள். ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அலுவலகத்திற்கு சென்றும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.