மக்களே…! குறைந்த முதலீடு செய்தால் போதும்…! மாதம் ரூ.1000 வரை வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான திட்டம்…!!

By Devi Ramu on கார்த்திகை 6, 2025

Spread the love

பொதுமக்கள் பல்வேறு வகையில் பணத்தை சேமித்து வைக்கின்றனர். முக்கியமாக தபால் நிலையம் மாதாந்திர வருமானத் திட்டத்தின் மூலம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். 18 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் போதும். நீங்கள் 100 ரூபாய் முதலீடு செய்து கணக்கை தொடங்கி 1000 ரூபாய் பணத்தில் இருந்து 9 லட்சம் லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தில் கூட்டு கணக்கில் உள்ள முதலிடம் அடங்கும். கூட்டுக்கணக்கில் அதிகபட்சமாக 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதம் முடிந்ததும் வட்டி கொடுக்கப்படும். இது முதல் காலம் வரை தொடரும். இந்த திட்டத்தில் நாமினியை சேர்த்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி உண்டு. எனவே முதலீட்டை அதற்கு ஏற்ப திட்டமிட வேண்டும்.

   

உதாரணமாக நீங்கள் உங்கள் மனைவியுடன் சேர்ந்து இந்த திட்டத்தில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 7.40 சதவீதம் வட்டி விகிதத்தில் 1 லட்சத்து 11 ஆயிரம் சம்பாதிக்கலாம். இதன் மூலம் மாதத்திற்கு 9250 வட்டியாக கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான வழி. இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று அறிந்து கொள்ளலாம்