இந்தியாவில் தபால் அலுவலகத்தில் நீண்ட காலமாக ஆர்டி(RD), டிடி (TT), பிபிஎஃப் (PPF), கிசான் விகாஸ் பத்ரா இது போன்ற பலத் திட்டங்கள் உள்ளன. ஆபத்துக் குறைந்த திட்டமாக மாதாந்திர வருமான திட்டம் (MIS) உள்ளது. திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாதம்தோறும் வட்டிக் கிடைக்கும். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர் ஓடு சேர்ந்து கூட்டுக் கணக்கை திறக்கலாம், ரூபாய் 15 லட்சம் முதலீடு செய்தால் நாளடைவில் 7.4% ஆண்டு வட்டிக் கிடைக்கும். விளக்கமாக சொல்லப்போனால் ரூ.9,250 மாதம் வட்டியாக உங்கள் கணக்கில் சேரும். இதற்கு எந்த ஒரு கூடுதல் முயற்சியும் தேவையில்லை. முதலீடு செய்தால் மட்டும் போதும், மாதம்தோறும் வட்டி உங்கள் கணக்கில் சேரும்.
தனி கணக்கு என்றால் அதிகபட்சம் ரூ.9லட்சம் முதலீடு செய்ய வேண்டும், கூட்டு கணக்கு என்றால் அதிகபட்சம் ரூ. 15 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 5 ஆண்டுக்கு பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகையை திரும்ப பெறலாம். மாதம் தோறும் வரும் வட்டியை எடுக்காமல் விட்டால் அதற்கும் கூடுதல் வட்டிக் கிடைக்கும். நீங்கள் நினைத்தால் ஓராண்டு முடிந்த பிறகு கூட கணக்கை மூடலாம். தபால் அலுவலக சேமிப்பு கணக்கின் மூலமாகவே வட்டிப் பெரும் வசதிவுண்டு. நீண்டகால நிதி நிலை தன்மைக்கு உதவக்கூடிய ஒரு பயனுள்ள வழியாகும். அதேபோல் குறைந்தபட்ச ஆபத்து, அரசு உத்தரவாதம் என அனைத்தும் சேரும். பொதுமக்கள் நம்பிக்கையோடு முதலீடு செய்யலாம்.
