அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் 8 வயதிலிருந்தே ஆபாச படத்திற்கு அடிமையாக இருப்பதை கண்டுபிடித்த பிறகு, தானும் அதற்கு அடிமையானதாக தெரிவித்துள்ளார். திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு, தனது கணவர் கைல் லோஃப்டினுக்கு ஆபாசப் பழக்கம் இருப்பதை மேடிசன் லோஃப்டின் கண்டுபிடித்தார் . சிறு வயதிலிருந்தே ஆபாச படம் பார்ப்பதற்கு ஆளானதாகவும், அதை “எந்தவொரு எதிர்மறை உணர்ச்சி அல்லது உணர்விற்கும் ஒரு ஊன்றுகோலாக” பயன்படுத்திக் கொண்டதாகவும் கைல் வெளிப்படுத்தினார் . மோசமான நிலையில், கைல் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணிநேரம் வரை பார்த்துள்ளார். இதனால் அவர்களின் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேதனையடைந்த மனைவியும் ஆபாச படம் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது வலியை கணவருக்கு உணர்த்துவதற்காக நானும் ஆபாச படத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், நாளைடைவில் நானும் அதற்கு அடிமையாகிவிட்டேன். பின், சிகிச்சை மற்றும் ஆன்மீகம் மூலம் நாங்கள் இருவரும் இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டோம்” என்று கூறியுள்ளார்.
