2023-இல் தியேட்டர் ஓனர்களுக்கு அதிக வசூலை வாங்கித்தந்த படம் எது தெரியுமா.? அட.., விஜய், ரஜினி படம்லாம் இல்லைங்க..

By admin on மார்கழி 15, 2023

Spread the love

கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்யும் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றால் அதில் அதிகமாக லாபமடைவது தயாரிப்பாளர்கள்தான். அதில் நடித்த நடிகர், நடிகையர், இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று விடுகின்றனர். ஆனால் அவர்கள் இயக்கிய படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது திரையங்குகள்தான். இதில் பெரிய நடிகர்களின் படங்கள் நல்லவிதமாக ஓடினால் மட்டுமே தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஓரளவு லாபம் கிடைக்கும். அவர்கள் தியேட்டரை தொடர்ந்து நிர்வகிக்க முடியும். தியேட்டர் ஊழியர்கள் சம்பளம், மின்கட்டணம், நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியும்.

Sarathkumar

#image_title

இந்த 2023ம் ஆண்டை பொருத்த வரை பல வெற்றிப்படங்கள் வெளிவந்தன. வசூலிலும் நிறைய சாதனை படைத்தன. ஆனால் ஒரு சில படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. எதிர்பார்த்த லாபத்தை தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெற்றுத் தரவில்லை. குறிப்பாக லியோ படம் ரிலீஸ் ஆன போது, தியேட்டர் உரிமையாளர்களுக்கு 60-40க்கு பதிலாக 75 – 25, 80 – 20 என பங்கு வெகுவாக குறைக்கப்பட்டதால், 190 ரூபாய் டிக்கெட் விற்றால், தியேட்டர் உரிமையாளர்களுக்கு 30 ரூபாய் மட்டுமே கிடைக்கும் ஏற்பட்டது. பொன்னியின் செல்வன், ஜெயிலர், லியோ, பொன்னியின் செல்வன் அதிக வசூலை பெற்றன. அடுத்த 2ம் இடத்தில் மாமன்னன், மாவீரன், சித்தா போன்ற படங்கள் பெற்றன.

   
   
Sarathkumar

#image_title

 

இந்நிலையில் வெற்றி சினிமாஸ் ராகேஷ் கவுதமன், ஏஜே சினிமாஸ் ஜெய்சன். ஜிகே சினிமாஸ் ரூபன் ஆகியோர் ஒரு நேர்காணலில் கூறுகையில், கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த ஆண்டில் தியேட்டர்களுக்கான வசூல் என்பது மிக குறைவுதான். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் தீபாவளி நேரத்தில் வர வேண்டியதில்லை. இது பெஸ்டிவல் படம் கிடையாது. இதுபோன்ற படங்கள் எப்போது வந்தாலும் கலெக்சன் கிடைக்கும். சில நேரங்களில் 15 பேர், 10 பேர், 4 பேருக்கு கூட காட்சி நடத்தி இருக்கிறோம். தியேட்டர்களை பொருத்த வரை சரத்குமார், அசோக் செல்வன் நடித்த போர்த்தொழில் படம்தான், சீக்கிரமாக பிக்கப் ஆகி எதிர்பார்த்ததை விட கணிசமான லாபம் கொடுத்து, மகிழ்ச்சி தந்தது என்று வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். தியேட்டர் உரிமையாளர்களை பொருத்த வரை சரத்குமார் நடித்த போர்த்தொழில்தான் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக உள்ளது.